எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் , எல்லோரும் பயணம் செய்கிறோம் ,வாழ்க்கை என்னும் படகு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது .இந்த பயணம் எப்போது முடியும் என்பது மட்டும் யாருக்கும் தெரியாது . பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும் .உறவுகள், நண்பர்கள் , கணவன் , மனைவி மற்றும் காதல் என்ற பந்தங்களை தாண்டி அதற்க்கு அப்பால் ஒரு பூமி உண்டு , அதை யாரும் அறிந்ததே இல்லை . எல்லா மனிதர்களுக்குமே அன்பு, காதல் என்ற உணர்வுகள் உண்டு, இதை எல்லாம் தாண்டிய ஒருவன் தான் ஞானி ஆகிறான் . ஒவ்வொரு மனிதனுக்கும் எந்த கால கட்டத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது .மனிதனின் ரகசிய ஓலைகள் கடவுளிடம் மட்டுந்தான் இருக்கிறது. அதை அறிந்து கொள்ளவோ தெரிய முயற்சிகவோ யாராலும் முடியாது . இதை எல்லாம் தெரியாமல் மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான் சாதிப்பதற்காக . !!!
Every Moment is very Beautiful