Skip to main content

Posts

Showing posts from 2019

Simple Weddings

Rinju Joseph Yesterday at 12:16 PM  · 

நான் விடை பெறுகிறேன் ....

தமிழகத்தின் தலைநகரம் சென்னையே , வந்தாரை வாழவைக்கும் அன்னையே , நான் விடை பெறுகிறேன் .... 13 வருடங்கள் என்னை அரவணைத்து , மல்லுக்கட்டி ,மகிழ்வித்து என்னை வாழவைத்த சென்னை மாநகரமே உனக்கு மனமார்ந்த நன்றி! சந்தோசம்,துக்கம்,கண்ணீர் எல்லாம் தந்த நீ என் உற்ற நல்ல நண்பன் . நான் இருந்த வீதிகளில் நாட்புறமும் உலாவந்தேன் , உன்னை இடமும் ,வளமும் ,புறமும் சுற்றிவந்தேன் .மறக்கமுடியாதே பல நிகழ்வுகள் எண்ணில் தந்தாய் ! கடற்கரை மணலிலும் , கண்ணிற்கடங்கா சாலைகளிலும் நடக்கும் போது எனக ்கு உன் அருமை தெரியவில்லை .நகர்ந்த நாட்களில் நானும் நகர்ந்தேன் , இப்போது தான் நான் உன்னை நான் அதிகமாய் நேசிக்கிறேன்.. வருவேன் உன்னை காண்பதற்கும் உன்னை ரசிப்பதற்கும் மீண்டும் .... நான் என் சொந்த ஊருக்கு போகிறேன் வழியனுப்பு ..! போய்வருகிறேன் என் நண்பனே ....!